இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
மாநிலங்களுக்குள்ளாக நதிகள் இணைப்புத் திட்டத்தை (காவிரி - குண்டாறு, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு) மேற்கொண்டார்.
காவல்துறைக்கென்று தனி ஆணையம் அமைத்தார்!
அரசுப் போக்குவரத்துத்துறையை உருவாக்கி, பேருந்துப் போக்குவரத்தை தேசியமயமாக்க காரணமாக இருந்தார்!
பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கினார்!
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி தனிச் சட்டம் இயற்றினார்
உள்ளாட்சிப் பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்!
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கினார்!
பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் விதவைப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்!
கை ரிக்சாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
யாசகர்களுக்கென்று மறுவாழ்வு மையம் அமைத்துக் கொடுத்தார்!
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) உருவாக்கிக் கொடுத்தார்!
`டைடல் பார்க்' எனும் கணினி மென்பொருள் பூங்கா உருவாக்கிக் கொடுத்தார்!
கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்தார்!
மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் கட்டமைத்தார்!
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்!
அனைத்துச் சாதியினரும் வேறுபாடின்றி ஒரே வளாகத்துக்குள் ஒற்றுமையாக வாழ வழிசெய்யும் வகையில் `சமத்துவபுரம்' திட்டத்தைக் கொண்டுவந்தார்!
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றும் உரிமையை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பெற்றுத் தந்தார்!
1975-ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முதன்முதலில் (24 மணி நேரத்துக்குள்ளாக) தீர்மானம் நிறைவேற்றினார்!
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனி ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்!
from Latest news